Home இந்தியா விருதுநகர் : ‘சித்தி’ ராதிகா – விஜய்காந்த் மகன் பிரபாகரன் மோதலில் பின்னுக்குத் தள்ளப்படுகிறாரா மாணிக்கம்...

விருதுநகர் : ‘சித்தி’ ராதிகா – விஜய்காந்த் மகன் பிரபாகரன் மோதலில் பின்னுக்குத் தள்ளப்படுகிறாரா மாணிக்கம் தாகூர்?

480
0
SHARE
Ad
சரத்குமார் – ராதிகா

சென்னை : திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அங்கு மீண்டும் களம் காண்கிறார் மாணிக்கம் தாகூர். பெயரில்தான் தாகூரே தவிர உள்ளூர் தமிழர்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் விருதுநகரைக் கைப்பற்றியவர்.

விஜய் பிரபாகரன்

மீண்டும் அவருக்கே தொகுதி வழங்கப்பட்டதால் வெற்றி பெற்றுவிடுவார் என திமுக கூட்டணி நினைத்திருக்க – அங்கு போட்டியிடும் எதிரணி போட்டியாளர்களால் கலகலப்பும் பரபரப்புமான தொகுதியாக மாறியிருக்கிறது விருதுநகர்.

விருதுநகரில் பிரபல சினிமா நடிகை ராதிகா சரத்குமாரைக் களமிறக்கியிருக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடுகிறார் விஜய்காந்தின் மகன் பிரபாகர். இந்த இரு பிரபலங்களின் ஆளுமையால் தொகுதியில் வாக்காளர்களிடையே மாணிக்கம் தாகூரின் பெயர் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அனைத்து வாக்காளர்கள், அரசியல் பார்வையாளர்களிடையே ராதிகாவா – பிரபாகரனா – என்பதுதான் பேச்சு! இருவருக்குமே பல சாதகங்கள்! எனவே, மாணிக்கம் தாகூர் மீண்டும் விருது நகரைக் கைப்பற்றுவது கடினம் என்பதுதான் இப்போதைய நிலைமை!