Home இந்தியா அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

581
0
SHARE
Ad

சென்னை : இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக இழுபறியில் இருந்து வந்த அதிமுக-தேமுதிக ஒருவழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

விஜய்காந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது. விஜய்காந்த் மறைவினால் ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தால் இந்த முறை தேமுதிகவுக்கு ஆதரவு அதிகரிக்கலாம் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எந்த முக்கியக் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில் தேமுதிக கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.