Home இந்தியா பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகள்

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகள்

291
0
SHARE
Ad
டிடிவி தினகரன்

சென்னை : பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) கட்சிக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவை எந்தத் தொகுதிகள் என்பது பாஜகவே அறிவிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அநேகமாக தேனி அல்லது சிவகங்கை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்தாலும், தங்களின் சொந்த சின்னமான குக்கர் என்னும் சமையல் பாத்திர சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தினகரன் கூறியிருக்கிறார்.