Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் 15 அரசு ஊழியர்களைக் கைது செய்தது – 2 மில்லியன் ரிங்கிட்...

ஊழல் தடுப்பு ஆணையம் 15 அரசு ஊழியர்களைக் கைது செய்தது – 2 மில்லியன் ரிங்கிட் கையூட்டு

299
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : ஊழலுக்கு எதிராக கடுமையான அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம், 15 அரசாங்க ஊழியர்களை இலஞ்சம் பெற்ற புகார்களுக்காக கைது செய்துள்ளது.

சிகரெட், புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களை நாட்டின் நுழைவாயில்களில் கடத்திக் கொண்டு வரும் கும்பல்களுக்கு உதவி செய்யும் நோக்கில் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை இலஞ்சமாகப் பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பேங்க் நெகாரா, வருமானவரி இலாகா ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த கைது நடவடிக்கை கடந்த மார்ச் 11 முதல் மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

2017 முதல் 2023 வரை இந்த அரசாங்க ஊழியர்கள் இதுபோன்று இலஞ்சம் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்களின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.