Home கலை உலகம் ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர் சாந்தனாருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர் சாந்தனாருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

416
0
SHARE
Ad
சாந்தனார்

‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளர் சாந்தனாருடன் ஒரு சிறப்பு நேர்காணல்’

சாந்தனார் (அத்தியாயம் 11), பங்கேற்பாளர்:

1. உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுக.

#TamilSchoolmychoice

வணக்கம். 5Elementz-இன் ரெக்கார்டிங் ராப் கலைஞராக நான் கடந்த 13 ஆண்டுகளாக மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றைப் படைத்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேசக் கலைஞர்களுக்காக 40-க்கும் மேற்பட்டப் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளேன். தமிழில் ‘சிறந்த பாப் பாடல்’, ‘சிறந்த பக்திப் பாடல்’, ‘திரைப்படம் மற்றும் நாடகத்தில் சிறந்த பாடல்’ ஆகிய பிரிவுகளுக்காக 3 ‘அனுகேரா இண்டஸ்ட்ரி மியூசிக் (ஏஐஎம்)’ விருதுகளையும் ‘பைரவி’ பாடலுக்கான ஆசியான் சர்வதேச விருதையும் வென்றுள்ளேன். ஒரு சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பாளரான எனக்கு ‘குலோபல் ஐகான் ஓவ் மோதிவேஷன்’ என்றப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றேன்.

2. பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் எவ்வாறு இருந்தது?

இது நான் கலந்து கொள்ளும் இரண்டாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ஆஸ்ட்ரோவில் எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி. வடி தொகுத்து வழங்கிய ‘வசந்தம்’ எனும் சிங்கப்பூர் நிகழ்ச்சி எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சி எனது தனிப்பட்டக் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள அனுமதித்தது. இந்த உரை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடம் மற்றும் மேடை மிகவும் சுவாரசியமாக இருந்தது. மேலும் படப்பிடிப்பு இரவில் நடந்ததால் மிகவும் அருமையாக இருந்தது. ஏனெனில், குறைவான மன அழுத்தம் மற்றும் கவனச் சிதறல்கள் இல்லாமல் இருந்தது. படக்குழுவினர் மிகவும் நட்புணர்வுடன் பழகினர். படப்பிடிப்பு எப்படி நடக்கும், ஒளிப்பதிவுக் கருவியின் செயல்பாடுகள், திரைக்குப் பின்னால் மற்றும் பலவற்றைப் பற்றிய அவர்களின் விளக்கங்கள் மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தன. தொகுப்பாளர், விகடகவி மகேன் என்னுடன் மிகவும் நட்புணர்வுடன் இருந்ததோடு, நிகழ்ச்சியைக் கையாள்வதில் மிகவும் தொழில்முறையுடன் நடந்துக் கொண்டார். அவரும் மிகவும் பணிவாக இருந்தார். எனக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை என்னால் வெளிப்படுத்த முடிந்தது, அது உண்மையிலேயே மறக்கமுடியாத தருணம். எனது மனைவி, நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு (நண்பா) நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

3. கலைத்துறையில் உங்களின் முன்மாதிரி யார்?

நானே மிகப்பெரிய முன்மாதிரி என்றுதான் கூறுவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடம்தான், நான் ஒவ்வொரு நாளும் ‘கைசன்’ (முன்னேற்றம்) தேடுவேன். எனதுச் சுயப் பாணியில் தனித்துவமாகவும் உண்மையாகவும் இருக்க விரும்புகிறேன்.

4. உங்களின் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.

நான் எனது இரசிகர்களைப் பாலின வேறுபாடின்றி நண்பா என அழைக்க விருப்புகிறேன். ‘விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்’ மற்றும் ‘உங்களை நம்புங்கள், நீங்கள் பெரிய வெற்றியை அடையலாம்’ என்றப் பதிவுகளை இவ்வேளையில் எனது நண்பர்கள் அனைவருக்கும் கூற விரும்புகிறேன்.