Home நாடு பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்

பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்

286
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: 6 மாநில இடைத் தேர்தல்களுக்கான தேர்தல் போர் நடந்து முடிந்து அதன் களைப்பு நீங்கும் முன்னே அடுத்து இன்னொரு போர்க்களத்தைச் சந்திக்க, பக்காத்தான் ஹாரப்பான்-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கமும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் தயாராகி வருகின்றன.

அமானா கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சாலேஹூடின் அயூப் மறைவால் நடைபெறவிருக்கும் பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள்தான் அந்தப் போர்க்களம்.

அமானா சார்பில் பூலாய் நாடாளுமன்றத்திலும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத்திலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர். அந்த வேட்பாளர்களின் பெயர்கள் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறது.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் சார்பிலான வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாநில தேர்தல்களில் வீசிய பச்சை அலை ஜோகூரிலும் வீசுமா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

ஜோகூர் மொகிதின் யாசினின் பூர்வீக மாநிலம் என்பதால் இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற அவர் முழுமூச்சுடன் பாடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூலாய், சிம்பாங் ஜெராம் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 26-ஆம் தேதியும் வாக்களிப்பு செப்டம்பர் 9-ஆம் தேதியும் நடைபெறும்.