Home நாடு மக்கோத்தா இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி!

மக்கோத்தா இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி!

212
0
SHARE
Ad

குளுவாங் : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லா மாபெரும் வெற்றி பெற்றார்.

சைட் உசேன் சைட் அப்துல்லா 27,995 வாக்குகள் பெற்ற நிலையில் பெரிக்காத்தான் – பெர்சாத்து வேட்பாளர் ஹாய்சான் 7,347 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் குறைந்த அளவிலான வாக்குகள் மட்டுமே – அதாவது 47.16 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் தேசிய முன்னணி 20,648 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.