பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான இராணுவத் தாக்குதலில் லெபனானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹாசான் நஸ்ரால்லா கொல்லப்பட்டார் என ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிப்படுத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குத்தில் அவர் கொல்லப்பட்டார். இதன் மூலம் இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல்கள் விரிவடைந்து வட்டாரப் போர் மேலும் விரிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் முன்னர் தோற்றுவிக்கப்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் நஸ்ரல்லா ஒருவராவார். அந்த இயக்கத்தை வலிமையான ஒரு இராணுவ அமைப்பாக மத்திய கிழக்கில் மாற்றியமைத்ததில் நஸ்ரல்லா ஒருவராவார்.
இஸ்ரேல் – லெபனான் மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த ஒரு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நஸ்ரால்லா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் அறுவரும் கொல்லப்பட்டதுடன் 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தென் லெபனாலில் தொடர்ந்து கொண்டிருக்கும் போரில் இதுவரையில் சுமார் 5 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.