Home நாடு தமிழ் நாடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசிய வருகை

தமிழ் நாடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசிய வருகை

248
0
SHARE
Ad
எஸ்.ராமகிருஷ்ணன்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது  வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வந்த கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய கட்டுரைத்தொடர்களும் இவரைச் சிறந்த இலக்கிய ஆளுமையாக அடையாளம் காட்டின. கட்டுரைகளைத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், குழந்தை நூல்கள், உலக இலக்கியப் பேருரைகள், வரலாறு, நாடகத் தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு, மொழி பெயர்ப்புகள், தொகை நூல் என 134 நூல்களை இவர் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

தமிழகம் விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் 1966இல் பிறந்த இவர் முழுநேர எழுத்தாளராக உள்ளார். யாமம், சஞ்சாரம், நெடுங்குருதி, உபபாண்டவம், பதின், இடக்கை, துயில், உறுபசி போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க நாவல்கள். யாமம் நாவலுக்காக 2008இல் தாகூர் இலக்கிய விருதை வென்றார். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் சஞ்சாரம் நாவல் 2018இல் சாகித்திய அகாடெமி விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது.

இந்தியா முழுவதும் பயணம் செய்து, தாம் சந்தித்த மனிதர்களையும் அவர்தம் வாழ்வையும் பதிவு செய்துள்ளார். பிரஞ்சு, ஜப்பான், ஆங்கிலம் ஆகிய மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம்  செய்ததோடு ருஷ்ய எழுத்தாளர்களைப் பற்றிய தொடர் இலக்கிய உரைகளை நிகழ்த்தி,  அவர்களைப் பற்றிய நூல்களை எழுதி தமிழ் வாசகர்களின் வாசிப்புத் தளத்தை விரிவாக்க உதவியுள்ளார்.

#TamilSchoolmychoice

சினிமாவிலும் சில படங்களுக்கு இவர் கதை, திரைக்கதை, வசனம் துறைகளில் பணியாற்றியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க படம் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழும் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசியாவுக்கு வருகை தந்து கீழ்க்காணும் ஐந்து நகர்களில் உரையாற்ற உள்ளார். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தமிழாசிரியர்கள் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

சுங்கை சிப்புட் (29.9.2024) ஞாயிறு

சுங்கை சிப்புட் விஸ்மா அம்னோ மண்டபத்தில், மாலை மணி 4.00க்குச் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கமும் ம.இ.கா. ஸ்ரீதாமான் கிளையும் இணைந்து ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் ‘புதினமும் புதிய தலைமுறையும்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். சிறப்பு வருகை: மலேசிய சிலம்பச் சங்கத் தலைவர் டாக்டர் மு.சுரேஸ். தொடர்புக்கு: திரு.சின்னராசு 0135081812,  குமாரி செண்பகவள்ளி 0167899633,  பி.எம்.மூர்த்தி 0192675337.

ரிஞ்சிங் (30.9.24) திங்கள்

சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத் தலைமையாசிரியர் மன்ற ஏற்பாட்டில் ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில்  மாலை மணி 2.00 தொடக்கம் நடைபெறவுள்ள தமிழ் விழாவில் ‘உலகளாவிய நிலையில் மாறிவரும் கல்வித்திட்டங்கள் / வகுப்பறை மாற்றங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். சிறப்பு  வருகை: சிலாங்கூர் மாநில தமிழ்மொழி உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன். தொடர்புக்கு:  திருமதி சாந்தி 0142316819,  பி.எம்.மூர்த்தி 0192675337,  ந.பச்சைபாலன் 0126025450.

மலாக்கா (1.10.2024) செவ்வாய்

மலாக்கா, தமிழர் சங்க ஏற்பாட்டில், தமிழர் சங்கக் கட்டடத்தின் கோ.சாரங்கபாணி கூடத்தில்   மாலை மணி 6.00க்கு ‘இலக்கிய ரசனையும் அழகியல் கூறுகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.  தொடர்புக்கு: திரு.குணசேகரன் 0123249915,  பி.எம்.மூர்த்தி 0192675337.