Home இந்தியா உதயநிதி ஸ்டாலின் தமிழ் நாடு துணை முதலமைச்சராகிறார்!

உதயநிதி ஸ்டாலின் தமிழ் நாடு துணை முதலமைச்சராகிறார்!

124
0
SHARE
Ad
உதயநிதி ஸ்டாலின்

சென்னை : நீண்ட காலமாக தமிழகத்தில் விவாதப் பொருளாக இருந்த அரசியல் முடிவு இன்று செயல்படுத்தப்படவிருக்கிறது.

மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வராக இன்று பதவியேற்பார் என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விடுத்த அறிவிப்பு தெரிவித்தது.

இந்திய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) பிற்பகல் 3.30 மணியளவில் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மற்ற சில அமைச்சர்களும் பதவியேற்கவிருக்கின்றனர்.