Home இந்தியா அதிமுக மாநாடு மதுரையில் – கலகலக்கும் தூங்கா நகர்!

அதிமுக மாநாடு மதுரையில் – கலகலக்கும் தூங்கா நகர்!

420
0
SHARE
Ad

மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆதரவில்லை என்ற கூற்றுகளுக்கு மத்தியில் மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெறுகிறது அதிமுக மாநில மாநாடு. இந்த மாநாட்டுக்காக தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறுகிறது இந்த மாநாடு.மாநாடு குறித்த சிறப்பு அம்சங்கள் சில:

*மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

*மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

*பந்தலைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

*காலை 7.45 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

*ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

*நுழைவுவாயில் அருகே அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

*கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

*மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெறுகின்றன. அதிமுக பிரமுகர்களோடு பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார்.

*மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் மதுரையில் குவியத் தொடங்கிவிட்டனர்.

*ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 1,500 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுமார் 10 லட்சம்பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

*காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மதுரை விமான நிலையம் அருகே அதிமுக மாநாடு நடைபெறுவதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

*காலை 8 மணிக்கு தொடங்கும் மாநாடு இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

*51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுகவின் கொடியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றும்போது ஹெலிகாப்டரில் பூக்களை தூவி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*எடப்பாடி தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் அவர் மாலை புறப்பட்டு மாநாட்டு கூட்டத்திற்கு வரும் வரை ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்படுகின்றன.

*இந்த மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு 3 வேளையும் சைவ சாப்பாடு வழங்கப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். 100-க்கும் மேற்பட்ட முகப்பிடங்களில் (கவுன்ட்டர்கள்) வரிசையில் நின்று உணவை பெற்றுக் கொள்ளலாம்.

*மாநாட்டுக்கு செல்ல தொண்டர்களுக்காக சென்னையிலிருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தனி ரயில் மதுரை சென்றுள்ளது.