அந்த வகையில் சமீபத்தில் அவர், மண்பானை என்றொரு குறும் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியதோடு, அதை தானே தயாரித்தும் இருந்தார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த அந்த குறும் படத்துக்கு லெனின் படத்தொகுப்பு செய்திருந்தார்.
20 நிமிடங்கள் ஓடக்கூடிய அப்படத்தை அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த ஹைபல்ப் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்தார் பாண்டியராஜன்.
படத்தைப்பார்த்து விட்டு அவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதினை அளித்துள்ளது ஹைபல்ப் திரைப்படக் குழு.
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த பாண்டியராஜன், தனக்கு அமெரிக்கர்கள் கையால் விருது கிடைத்திருப்பதை தனது நண்பர்களிடம் பெருமையாகக் கூறி வருகிறாராம்.