Home கலை உலகம்  ஆஸ்ட்ரோ: ‘ஊர் சுற்றும் பாய்ஸ்’ பயணத் தொடரை விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழுங்கள்

 ஆஸ்ட்ரோ: ‘ஊர் சுற்றும் பாய்ஸ்’ பயணத் தொடரை விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு மகிழுங்கள்

68
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்து மலேசியர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட், சூகா ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் உற்சாகமானப் பயணத் தொடரான ஊர் சுற்றும் பாய்ஸ்-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழலாம். இந்தத் தொடர் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்புகளின் மறக்க முடியாத சாகசத்திற்கு அழைத்துச் செல்வதுடன், சுவையான உணவு வகைகளைச் சித்தரிக்கும் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை வழங்கும்.

‘உணவுப் பிரியர் (தியாகு பி)’, ‘சாகச விரும்பி (கிரிஸ் ஜே ஹரிஷ்)’ இவர்களுடன் ‘கனவுகளைக் கொண்டவர் (டவியூ புவனன்)’ என மூன்றுக் கருப்பொருளில் உள்ளூர் திறமையாளர்களால் ஊர் சுற்றும் பாய்ஸ் தொகுத்து வழங்கப்படும். அவர்கள் சுவையானப் புதிய உணவுகளைக் கண்டறிவதோடு, துடிப்பான, துணிச்சலான நடவடிக்கைகளை அனுபவித்து, ஒவ்வொரு அழகிய நிலப்பரப்பு மீதும் கலாச்சாரத்தின் ஆழமானக் கதைகளை ஆராய்வதால் இந்த உள்ளூர் தமிழ் பயணத் தொடரின் வழி மலேசியா முழுவதுமான ஒரு பயணத்தில் அவர்களுடன் இணையுங்கள்.

முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தனித்துவமான வடிவம், அதிகம் அறியப்படாதச் சுற்றுலாத் தளங்கள், வரலாற்றுத் தளங்கள் உள்ளூர் சந்தைகள், தெரு உணவுக் கடைகள்- கலாச்சாரக் கூறுகள் நிறைந்த உணவகங்களில் காணப்படும் பல்வேறு சுவையான உணவுகளைச் சித்தரிக்கிறது. பாராகிளைடிங், வெள்ளை-நீர் ராஃப்டிங், ஸ்நோர்கெல்லிங், நீர் மூழ்குதல் போன்ற பலத் துணிச்சலான நடவடிக்கைகளைக் கண்டு மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

‘சுற்றுப்பயணம் ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்தச் செலவில் மனநிறைவாக இருக்கலாம்’ என்ற வலுவான, சக்திவாய்ந்தச் செய்தியை பார்வையாளர்களிடையே விதைப்பதை நோக்கமாக முகேஸ்வரன் சிவானந்தம் இயக்கிய இந்த 10 அத்தியாய நிகழ்ச்சிகள் கொண்டுள்ளன. கூடுதலாக, ஊர் சுற்றும் பாய்ஸ், மீனவர் சமூகம், பூர்வகுடி சமூகத்தினர் போன்ற உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை முறையுடன், ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரம் மரபுகளையும் இந்தத் தொகுப்புகள் சித்தரிக்கின்றன.

அத்தியாயத்தின் விவரங்கள் பின்வருமாறு:

அத்தியாயம் இடம்பெற்ற இடங்கள்/நடவடிக்கைகளின் தனித்துவமானக் கூறுகள்

அத்தியாயம் 1 – குகை சாகசம் (பேராக்)    

உணவுப் பிரியர்:

  • ஈப்போ நகரத்தில் உள்ளக் கடைகள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் உள்ளூர் உணவுகள்

சாகச விரும்பி:

  • நதி ராஃப்டிங்
  • வெள்ளை நீர் நதி ராஃப்டிங்

கனவுகளைக் கொண்டவர்:

  • டெம்புருங் குகை

அத்தியாயம் 2 – மீன்பிடி சாகசம் (சிலாங்கூர்)

உணவுப் பிரியர்:

  • புதிதாகப் பிடித்த மீன்களை உள்ளூர் உணவகத்திற்குக் கொண்டுச் சென்றுச் சமைத்து ருசிப்பது

கனவுகளைக் கொண்டவர்:

  • ரெடாங் கடற்கரை, செகிஞ்சான் (சூரிய உதயம்)
  • அவா மரம்
  • மீன்பிடி கிராமம்
  • கழுகுக்கு உணவளித்தல்
  • நீல ஒளி நிகழ்வு

அத்தியாயம் 3 – வரலாற்றுச் சாகசம் (கெடா)

உணவுப் பிரியர்:

  • புக்கிட் ஜெராய் உல்லாசப்போக்கிடத்தில் சுவையான உணவுகள்

கனவுகளைக் கொண்டவர்:

  • புஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகம் (தென்கிழக்கு ஆசியாவின் பழமையான நாகரிகம்)
  • புக்கிட் பத்து பஹாட் சண்டி
  • தொல்லியல் பெங்கலன் புஜாங் தளம்

அத்தியாயம் 4 – நீர்வீழ்ச்சி சாகசம் (பேராக்) 

உணவுப் பிரியர்:

  • லதா மேகோர் நீர்வீழ்ச்சிக்கானப் பயணத்தில் பல்வேறுச் சாலையோர உணவுகள்

சாகச விரும்பி:

  • காடு வழியாக நடைப்பயணம்

கனவுகளைக் கொண்டவர்:

  • லதா கிஞ்சாங் நீர்வீழ்ச்சி
  • லதா மேகோர் நீர்வீழ்ச்சி

அத்தியாயம் 5 – காபி சாகசம் (பேராக்) உணவுப் பிரியர்:

  • அன்டோங் காபி (மலேசியாவின் பழமையானக் காபி ரோஸ்டர்)

கனவுகளைக் கொண்டவர்:

  • தந்தி அருங்காட்சியகம் (மலேசியாவில் அகற்றப்பட்ட முதல் ரயில் நிலையம்)
  • மினி அருங்காட்சியகம் & சன் யாட் சென் வீடு
  • பொதுப் பூங்கா (மலேசியாவின் முதல் பொதுப் பூங்கா)
  • தைப்பிங் மிருகக்காட்சிசாலை – இரவு சஃபாரி (மலேசியாவின் பழமையான மிருகக்காட்சிசாலை)

அத்தியாயம் 6 – தீவு சாகசம் (பினாங்கு)      

உணவுப் பிரியர்:

  • பிரான் மீ

கனவுகளைக் கொண்டவர்:

  • ஜெரெஜாக் தீவு
  • அமான் தீவு
  • கெதுங் தீவு
  • பினாங்கு பாலம்

அத்தியாயம் 7 – விவசாய சாகசம் (ஜொகூர்)

உணவுப் பிரியர்:

  • கஃபே மற்றும் சமையல் இன்பங்கள் (ரொட்டி சானாய், ஆசாம் பேடாஸ் மற்றும் ரொட்டி ஜாலா)

கனவுகளைக் கொண்டவர்:

  • அரோவானா விவசாயம்
  • காதலர்களின் பாலம்

அத்தியாயம் 8 – ஆகாயச் சாகசம் (திரெங்கானு) 

உணவுப் பிரியர்:

  • கோலா பெசுட்டில் பிரபலமான உணவுகள் (நாசி டகாங், பெசுட் இரவுச் சந்தை மற்றும் லக்சா திராங்கானு)

சாகச விரும்பி:

  • புக்கிட் புபுஸ் தளத்தில் பாராகிளைடிங்

அத்தியாயம் 9 – பூர்வக்குடிச் சாகசம் (பகாங்)

உணவுப் பிரியர்:

  • பூர்வக் குடியினருடன் இரவு உணவு மற்றும் தங்குதல்

சாகச விரும்பி:

  • காட்டு மலையேற்றம்
  • நீச்சல்
  • ஊதுகுழாய் வேட்டை

கனவுகளைக் கொண்டவர்:

  • பூர்வக் குடியினர் கிராமம்
  • கேமரன் மலைத் தாவரப் பூங்கா
  • தேன் அறுவடை

அத்தியாயம் 10 – நீர் மூழ்குதல் சாகசம் (திரெங்கானு)  

உணவுப் பிரியர்:

  • தெங்கோல் பவளத் தீவில் உணவருந்தல்

சாகச விரும்பி:

  • கயாக்கிங்
  • ஹைட்ரோ பைக்கிங்
  • ஸ்நோர்கெல்லிங்
  • காட்டு மலையேற்றம்
  • நீர் மூழ்குதல்

கனவுகளைக் கொண்டவர்:

  • தெங்கோல் பவளத் தீவு

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் ஊர் சுற்றும் பாய்ஸ்-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு களியுங்கள்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my  அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.