Home நாடு யுனேஸ்வரன் ஒற்றுமைத் துறை அமைச்சில் துணையமைச்சரானார்!

யுனேஸ்வரன் ஒற்றுமைத் துறை அமைச்சில் துணையமைச்சரானார்!

431
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் ஒற்றுமைத் துறை அமைச்சின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த செனட்டர் சரஸ்வதி கந்தசாமி துணையமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் சரஸ்வதி செனட்டராகத் தொடர்கிறார். கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி அவர் மீண்டும் இரண்டாவது தவணைக்கு செனட்டராக நியமிக்கப்பட்டார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகச் செயல்பட்டு வரும் யுனேஸ்வரன், துணையமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் டாகாங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.