Home இந்தியா கர்நாடக முதல்வராக சித்தராமய்யா இன்று பதவியேற்பு

கர்நாடக முதல்வராக சித்தராமய்யா இன்று பதவியேற்பு

495
0
SHARE
Ad

siddaramaiah_350_051013063853பெங்களூரு, மே 14 –  கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமய்யா இன்று பதவியேற்கிறார்.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றது.

புதிய முதல்வராக சித்தராமய்யா சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

பெங்களூருவில் உள்ள காண்டிவரா மைதானத்தில், இன்று நடைபெறும் விழாவில் மாநில கவர்னர் பரத்வாஜ் சித்தராமய்யாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இரண்டொரு நாட்களில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.