Home நாடு ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் மசீச வின் டீ சியூ கியாங் பதவி ஏற்றார்!

ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் மசீச வின் டீ சியூ கியாங் பதவி ஏற்றார்!

525
0
SHARE
Ad

 

image (1)ஜோகூர் பாரு, மே 14 – மசீச கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் மற்றும் பூலாய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டீ சியூ கியாங் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இன்று பதவி ஏற்றார்.

பொதுத்தேர்தலில் மசீச கட்சியின் தோல்வி காரணமாக அரசாங்கப் பதவிகளை கட்சியினர் ஏற்கப்போவதில்லை என மசீச தலைவர் சுவா சொய் லெக் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் சீனர்களின் பிரதிநிதியாக ஒருவர் வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரின் கோரிக்கையின் கீழ் மாநில ஆட்சிக் குழுவில் டீ சியூ கியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலா, உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் இலாகா பொறுப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு டீ சியூ கியாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.