Home இந்தியா ஜெயலலிதாவின் கடிதத்துக்கு கருணாநிதியிடம் ஆதாரம்

ஜெயலலிதாவின் கடிதத்துக்கு கருணாநிதியிடம் ஆதாரம்

710
0
SHARE
Ad

imagesசென்னை,பிப்.2-விக்ரம் படத்தின் போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தரத்தயாராக இருக்கின்றேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்; “வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி’ என்ற தலைப்பில் புதன்கிழமை கடிதம் ஒன்று எழுதினேன். அதில் கமல்ஹாசன் தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம்  குறித்தும் குறிப்பிட்டிருந்தேன்.”

“இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும் எம்.ஜி.ஆருடன் தினமும் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு இருந்ததால் எதற்கு கடிதம் எழுதவேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார்.”

#TamilSchoolmychoice

இதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா  தன் பேட்டியில் கூறியுள்ளார்.

“நான் எழுதியதற்குப் போதுமான ஆதாரம்  என்னிடம் இருக்கிறது. முதல்வர் என் மீது வழக்கு போடும்போது  நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.