Home இந்தியா சல்மான் ருஷ்டி படைப்பாளி அல்ல – ‘சாத்தான்’: முன்னாள் மத்திய மந்திரி தாக்கு

சல்மான் ருஷ்டி படைப்பாளி அல்ல – ‘சாத்தான்’: முன்னாள் மத்திய மந்திரி தாக்கு

703
0
SHARE
Ad

ed3e3a26-dc77-4d28-afbe-d9617df9615a_S_secvpf.gifகொல்கத்தா, பிப். 2-கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலக்கிய மாநாட்டில் நான் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பாணர்ஜி தடுத்துவிட்டார் என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டி இருந்தார். இந்த கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுல்தான் அகமது மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- “சல்மான் ருஷ்டி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும், அவர் கொல்கத்தாவிற்குள் நுழைவதை முதல் மந்திரி போலீசை வைத்து தடுத்துவிட்டார் என்பது உண்மையானால், அவர் சரியான காரியத்தை செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

சல்மான் ருஷ்டியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை. சல்மான் ருஷ்டியை கொல்கத்தாவிற்குள் நுழைய அனுமதித்திருந்தால், மத ஒருமைப்பாட்டை அவர் சீர்குலைத்திருப்பார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முகம்மது நபியை தரக்குறைவாக பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. சல்மான் ருஷ்டி ஒரு படைப்பாளி அல்ல. அவர் ஒரு சாத்தான்.