Home உலகம் பட்டாசு லாரி வெடித்து சீனாவில் 26 பேர் பலி

பட்டாசு லாரி வெடித்து சீனாவில் 26 பேர் பலி

648
0
SHARE
Ad

indexபீஜிங்,பிப்.2- சீனாவில், பட்டாசு ஏற்றிச்சென்ற லாரி, பாலத்தின் மீது சென்ற போது விபத்துக்குள்ளானதில், 26 பேர் பலியாயினர்.

சீனாவின், ஹெனான் மாநிலத்தில், சான்மென்சியா நகரில், பட்டாசு ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி, திடீரென வெடித்தது.

பாலத்தின் மீது லாரி சென்ற போது இந்த விபத்து நடந்ததால், பாலம் உடைந்தது. இந்த சம்பவத்தில், 26 பேர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

பட்டாசு லாரி வெடித்ததில், 80 மீட்டர் தூரத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் அடுத்த வாரம் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது; இதையொட்டி, பட்டாசு எடுத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.