Home உலகம் அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நொபொரு பத்மஸ்ரீ விருது பெற்றார்!

அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நொபொரு பத்மஸ்ரீ விருது பெற்றார்!

536
0
SHARE
Ad

Noburo-IATRஜூன் 8 – அண்மையில் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அனைத்துலக தமிழ்ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் மன்மோகன்சிங், மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்தார்.அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில், அவர்கையெழுத்திட்டார்.

ஜப்பானின், டோக்கியோ பல்கலை கழக பேராசிரியர்நொபொரு கராஷிமா, தென்னிந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்தவர்.

இதற்காக சென்னை பல்கலைகழகத்தில், கல்வெட்டு குறித்து ஆய்வுகளை ஜப்பானியரான இவர் மேற்கொண்டார்.தற்போது இவருக்கு வயது 80.

நன்றாக தமிழ் பேசக்கூடிய கராஷிமா, அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி சங்கதலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றிய சேவையைபாராட்டி, இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

உடல் நிலை சரியில்லாததால், டில்லியில் கடந்த மாதம், 5ம் தேதி, நடந்த விழாவில், கராஷிமா பங்கேற்கவில்லை.இதையடுத்து, டோக்கியோவில் இந்த விருதை, பிரதமர் மன்மோகன்சிங், கராஷிமாவுக்கு, கடந்த மே-29ஆம் தேதி வழங்கினார்.

நொபொருகராஷிமா ஜப்பானிய வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இவர் அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IATR-International Association of Tamil Research) முன்னாள் தலைவர் ஆவார். 1989ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இவர் இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டைமுன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார்.