புத்ராஜெயா,பிப்-7 உயர்கல்வி மாணவர்களுக்கு கூடுதல் கடனுதவி வழங்கும் ஒரே மலேசியா சிறப்பு திட்டத்தை நேற்று பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
உபகாரச் சம்பளத்திற்காகவும், உயர்க்கல்விக்காகவும் அதிகமான அளவில் அரசாங்கம் நிதி ஒதுக்கி வருகிறது. ஆனால் உயர்கல்வி பயில்வதற்கான கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இதனால் பெற்றோர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு ஒரே மலேசியா சிறப்பு திட்டத்தை உருவாகி இருப்பதாகவும், இதன் வழி மருத்துவம் பயிலவிருக்கும் மாணவர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும், இதர உயர்கல்வி படிப்பிற்கு 1 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு தேசிய உயர்கல்வி கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவியைத் தவிர்த்து, இந்த கூடுதல் கடனுதவியும் வழங்கப்படும் என்றார்.