Home உலகம் பாகிஸ்தானில் சிங்கப்பூர் மாடல் அழகி கொடூர கொலை !

பாகிஸ்தானில் சிங்கப்பூர் மாடல் அழகி கொடூர கொலை !

600
0
SHARE
Ad

Fehmina-Chaudhry-_2704218b

இஸ்லாமாபாத், அக் 18- சிங்கப்பூரை சேர்ந்த மாடல் அழகி கடத்தி செல்லப்பட்டு பாகிஸ்த்தானில் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அவரின் சடலம் ஏரி பகுதியில் வீசப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பல நாடுகளில் நடந்த அழகி போட்டியில் பங்கெடுத்த பெமினா சவுத்ரி (27) திருமணமானவர். இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரின் தாயார் நஷிபா தஹ்கீம் கராச்சியை சேர்ந்தவர். இவர் அடிக்கடி தாயை சந்திப்பதற்காக பாகிஸ்தான் செல்வார்.

#TamilSchoolmychoice

கடந்த 10ம் தேதி சவுத்ரி நிலம் ஒன்றினை வாங்குவதற்காக இஸ்லாமாபாத் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பின்னர் தான் கடத்தப்பட்டிருப்பதாக அவர் தன் தாயாருக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். தகவலை அறிந்த சவுத்ரியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையின் போது காவல் துறையினர் ஒரு நில தரகரை கைது செய்தனர். பாகிஸ்தானில் சுயமாக மாடல்களுக்கான பள்ளியை ஆரம்பிக்க விரும்பிய சவுத்ரி இந்நில சம்மந்தப்பட்ட விவராகத்தினால்தான் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.