Home 13வது பொதுத் தேர்தல் “என் மகனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான்” – மகாதீர் அதிரடி அறிக்கை

“என் மகனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான்” – மகாதீர் அதிரடி அறிக்கை

512
0
SHARE
Ad

Mukhriz-dan-Mahathirகோலாலம்பூர், அக் 19 – அம்னோ பேராளர்கள் அனைவரும் இன்று தான் வாக்களிக்கவுள்ளனர்.

ஆனால் உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தன் மகன் முக்ரிஸ் மகாதீர் வெற்றி பெறமாட்டார் என்று நேற்றே ஆரூடம் கூறிவிட்டார் முன்னாள் பிரதமரும், முக்ரிஸின் தந்தையுமான டாக்டர் மகாதீர் முகமட்.

அதற்கு அவர் கூறும் காரணம், “அம்னோவில் தலைவர் யாரை விரும்புகிறாரோ அவரைத் தான் பேராளர்களும் தேர்ந்தெடுப்பார்கள். என் காலத்திலும் அதே நிலை தான். என்னை எதிர்த்தவர் வெற்றி பெற முடியாது. எனவே முக்ரிஸ் வெற்றி பெற மாட்டார் என்பது எனக்கு தெரியும்” என்று மகாதீர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், முக்ரிஸ் 50 க்கு 50 சதவிகிதம் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், அவர் தலைவரின் ஆசி பெற்ற வேட்பாளர் அல்ல என்றும் மகாதீர் கூறினார்.

மக்கள் மாற்றத்தை விரும்புவதாக இல்லை என்று கூறிய மகாதீர், அம்னோ தேர்தலில் ஊழல் பரவலாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

அம்னோ உதவித்தலைவர் பதவிக்கு முக்ரிஸோடு சேர்த்து 6 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.