Home நாடு “நஜிப்பின் 1 மலேசியா சித்தாந்தம் உடைந்து நொறுங்கிவிட்டது” – லிம் கருத்து

“நஜிப்பின் 1 மலேசியா சித்தாந்தம் உடைந்து நொறுங்கிவிட்டது” – லிம் கருத்து

567
0
SHARE
Ad

LIM KIT SIYANGகோலாலம்பூர், அக் 19 –  ‘அல்லாஹ்’ என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி மேல்முறையீடு செய்து அவ்வழக்கில் வெற்றியும் பெற்றுள்ள அரசாங்கம், அந்தத் தடை தீபகற்ப மலேசியாவுக்கு மட்டும் தான் கிழக்கு மலேசியாவுக்கு இல்லை என்று கூறுவது பிரதமர் நஜிப் துன் ரசாக்கின்  ‘1 மலேசியா’ கொள்கைக்கு முரணானதாக உள்ளதாக ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

“இந்த இரண்டு வகையான கொள்கைகளின் மூலம் நாட்டில் சட்டம் இரண்டாக உடைந்து நிற்பது தெரிகிறது. இத்தனை ஆண்டுகாலம் நஜிப் கூறிவந்த  ‘1 மலேசியா’ கொள்கை உடைந்து நொறுங்கி விட்டது” என்றும் லிம் கிட் சியாங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் இரண்டு பகுதிகளுக்கும் இரண்டு வகையான சட்டம் இருப்பதால் இனி “2 மலேசியா” கொள்கை என்று அழைக்கலாமா என்றும் லிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice