Home 13வது பொதுத் தேர்தல் கோமளாவின் ஆதரவுடன் களமிறங்கும் பிரேமகுமாரிக்கு பழனிவேலின் ஆசி கிடைத்ததா?

கோமளாவின் ஆதரவுடன் களமிறங்கும் பிரேமகுமாரிக்கு பழனிவேலின் ஆசி கிடைத்ததா?

557
0
SHARE
Ad

Palanivel-MIc-e1364437544713கோலாலம்பூர், அக் 23 – ம.இ.கா மகளிர் அணித் தலைவி பதவியை இம்முறை தற்காத்துக் கொள்ளப்போவதில்லை என்று டத்தோ கோமளா கிருஷ்ணமூர்த்தி அறிவித்ததோடு மட்டுமின்றி, புதிதாக தேசியத் தலைவி பதவிக்குப் போட்டியிடப்போகும் நடப்பு ம.இ.கா மகளிர் துணைத் தலைவியான டத்தின் டாக்டர் சி.வி. பிரேமகுமாரிக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.

இந்நிலையில், கோமளாவைத் தொடர்ந்து பிரேமகுமாரிக்கு பழனிவேலும் தனது முழு ஆசியை வழங்கியதாக ம.இ.கா வட்டாரங்களில் பேச்சு நிலவியது. ஆனால் அந்த செய்தியில் கடுகளவும் உண்மையில்லை என்பதை ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று போட்டுடைத்தார்.

நேற்று சுற்றுச்சூழல் நிர்வாக மாநாட்டைத் திறந்து வைக்க வந்த பழனிவேலிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்ட போது, “ஆசியா.. நான் எந்த ஒரு தனிநபருக்கும் ஆசியையோ, ஆதரவையோ வழங்கவில்லை. எந்த ஒரு தனிநபரையோ அல்லது பிரிவையோ நான் எப்படி ஆசீர்வதிப்பேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பிரேமகுமாரி போட்டியிடப் போவதாக தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதற்கு தான் விருப்பமிருந்தால் தாராளமாகப் போட்டியிடுங்கள் என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

மகளிர் அணித் தலைவி பதவிக்குப் போட்டியிருக்குமானால் அதைத் தான் வரவேற்பதாகவும் பழனிவேல் குறிப்பிட்டார்.