Home கலை உலகம் நடிகை ஷகீலா சுயசரிதை எழுதுகிறார்-நடிகர்கள் கலக்கம்!

நடிகை ஷகீலா சுயசரிதை எழுதுகிறார்-நடிகர்கள் கலக்கம்!

954
0
SHARE
Ad

shakeela-wallpaper02

சென்னை, அக் 26- கவர்ச்சி நடிகை ஷகிலா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதுகிறார். இதனால் மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷகிலா 1980, 90களில் மலையாள பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தார். இவர் நடித்த பல படங்கள் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வந்தன. தாராள ஆடை குறைப்பு செய்து மலையாள ரசிகர்களை தன் வசப்படுத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஷகிலா படங்கள் ஓடும் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் ஷகிலா படங்கள் பின்னுக்கு தள்ளின. இதனால் ஷகிலாவுக்கு எதிரான சதிவலைகள் பின்னப்பட்டு மலையாள படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தனது வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களையும், கசப்பான நிகழ்வுகளையும் சுயசரிதையில் எழுத இருக்கிறார். சினிமாவின் இருட்டு பக்கங்களையும், புத்தகத்தில் உள்ளது உள்ளபடி கொண்டு வருகிறார். சுயசரிதை புத்தகத்தை விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளார். சுயசரிதை எழுதுவதால் புது படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஒதுக்கிவிட்டார்.