Home கலை உலகம் படமாகும் சீரடி சாய்பாபாவின் கதை

படமாகும் சீரடி சாய்பாபாவின் கதை

918
0
SHARE
Ad

sai-baba-wallpaper

அக் 26- மனிதராக அவதரித்து மகான் ஆன சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். இதற்கு சீரடி ஜெய் சாய்ராம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி நடிக்கிறார்.

இப்படத்துக்கு திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து பாஸ்கர் பாபா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது :

#TamilSchoolmychoice

சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது. இதுவரை பாபாவின் வாழ்க்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது. பாபாவை பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை லட்சியம். தற்போது நிறைவேறிவிட்டது என்றார்.

இந்த படத்தில் ராஜ்குமார், சக்திவேல், நளினிகாந்த், விஜயகுட்டி, பாவனா, நாராயணராவ், ரேகா லட்சுமி பாய், லஷ்மா ரெட்டி போன்றோரும் நடிக்கின்றனர். சாகித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பழனிபாரதி, பிறைசூடன், எம்.உசேன் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். சாய்வெங்கடேஸ் வரம்மா, ஸ்ரீ சாய்கல்பா வி.ராதிகா ஆகியோர் தயாரித்து உள்ளனர்.