Home வாழ் நலம் கழுத்து வலியா?

கழுத்து வலியா?

737
0
SHARE
Ad

Neck Pain

அக் 29- உடல் உழைப்பு குறைந்து, தொலைக்காட்சி,கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு நாளடைவில் கழுத்துத் தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம்.

பகுதிக்கு வலு சேர்க்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது. இந்த பயிற்சிகளை தினமும் வீட்டில் இருந்த படி 30 நிமிடம் செய்தால் போதுமானது.

#TamilSchoolmychoice

1. மேலும் கீழும் தலையை அசைத்தல்

தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.

2. வலது மற்றும் இடப்பக்கமாக தலையை அசைத்தல்

தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.

 3. மேல் வாயில் கைகளை வைத்து உடற்பயிற்சி செய்தல்

கைகளை மேல் வாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இருக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.

4. பின்னந்தலையில் கைகளை வைத்து உடற்பயிற்சி செய்தல்

கைகளை பின்னந்தலையில் வைத்தபடி  கழுத்தை  முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும்.

மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தோள்பட்டை தசைகள், கழுத்துத் தசைகள் நன்றாக இயங்கும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.