Home கலை உலகம் ஆபாச வசனம் சந்தானத்துக்கு கடும் எதிர்ப்பு!

ஆபாச வசனம் சந்தானத்துக்கு கடும் எதிர்ப்பு!

604
0
SHARE
Ad

b54a27b8-a77b-43e5-a91d-ad6fdf5a2073OtherImage

சென்னை, அக் 29- ஆபாச வசனம் பேசி நடித்துள்ள சந்தானத்துக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை கேலி செய்து வசனம் பேசியதற்காக சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்சியை நீக்காவிட்டால் படத்துக்கு தடை விதிக்கப்படும் என்றளவுக்கு பிரச்னை வலுத்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது.

இந்த பிரச்னை சூடு ஆறுவதற்குள் மற்றொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார் சந்தானம். என்றென்றும் புன்னகை படத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண், மாலையில் சீக்கிரமாக வீடு செல்வதற்காக, ‘நான் 5.10க்கு போலாம்னு இருக்கேன் என சொன்னதும், அதற்கு சந்தானம் ஆபாசமாக பதில் சொல்வதுபோல் வசனம் இடம்பெறுகிறது. இந்த வசனத்தை கேட்பவர்கள் முகம் சுளிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

திரையுலகினர் மத்தியில் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதுடன் சில பெண்கள் அமைப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இக்காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.