Home One Line P2 பிஸ்கோத்: பாகுபலி, பில்லாவாக சந்தானம்!

பிஸ்கோத்: பாகுபலி, பில்லாவாக சந்தானம்!

620
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சந்தானம் திங்களன்று தனது அடுத்த படமான ‘பிஸ்கோத்’தின் முன்னோட்டக் காணொளியை வெளியிட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு, சந்தானம் நகைச்சுவை நிகழ்ச்சியான லொல்லு சபா மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவின் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர், முன்னணி நகைச்சுவை நடிகராகி, தற்போது கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

#TamilSchoolmychoice

‘பிஸ்கோத்’ திரைப்பட முன்னோட்டத்தில், அவர் பாகுபலி, 300 (ஆங்கில திரைப்படம்), பில்லா போன்ற படங்களில் வரும் காட்சிகளை கொவிட்19 தொற்றின் போது நடைமுறைப்படுத்தப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

பிஸ்கோத் திரைப்படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். இதில் தாரா அலிஷா, சுவாதி முப்லா, நரேன், சௌகார் ஜானகி, ஆனந்தராஜ் மற்றும் நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கீழே இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: