Home One Line P1 குவான் எங்: நீதிமன்றத்தின் முன்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூட தடை

குவான் எங்: நீதிமன்றத்தின் முன்பு ஆதரவாளர்கள் ஒன்றுகூட தடை

527
0
SHARE
Ad

பட்டர்வொர்த்: கொவிட்19 பரவுவதைத் தடுக்கும் வகையில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மீது அடுத்த வாரம் குற்றம் சாட்டப்படும்போது, ​ பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் கூடியிருக்க வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

60 வயதான லிம் மீது அடுத்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செபெராங் பெராய் உத்தாரா மாவட்ட காவல் துறைத் தலைவர் நூர்சைனி முகமட் நூர் தெரிவித்தார்.

“நீதிமன்றத்துடன் தொடர்புடைய தரப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் நீதிமன்ற வளாகங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே கூடிவருவார்கள்.

#TamilSchoolmychoice

“சம்பந்தம் இல்லாத  தரப்புகளுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்கும்,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

காவல் துறையினர் நீதிமன்றங்களுக்குள் நுழையும் எந்த சாலைகளையும் மூட மாட்டார்கள், ஆனால், நிலைமையைக் காக்க 150 காவல் துறை அதிகாரிகளை நிறுத்துவார்கள் என்று அவர் கூறினார்.