Home கலை உலகம் பிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை!

பிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை!

975
0
SHARE
Ad

சென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம்1 அக்யூஸ்ட்‘. இப்படத்தில் சந்தானத்திற்கு இணையாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ராஜநாராயணன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் என்பவர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் ஒன்றை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதியில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் காட்சிகள் வெளியாகியிருப்பதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ள நிலையில் தேவையற்ற பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற  உள்நோக்கத்தோடு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவ்வமைப்பு எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும் அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வருகிற 27-ஆம் தேதி வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.