Home வணிகம்/தொழில் நுட்பம் பேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்!

பேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்!

1400
0
SHARE
Ad

மாஸ்கோ: வயர்லெஸ் லேப்ஸ் (Wireless Labs) எனும் ரஷ்ய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேஸ்ஆப் (FaceApp) பயன்பாட்டினால் நமது திருத்தப்பட்ட புகைப்படங்களை கணினியில் சேமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பயனர்கள் தங்களின் வயதான தோற்றத்தைத் தெரிந்து கொள்வதற்காக இந்த செயலியை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

டெக் க்ரஞ்ச் வெளியிட்ட ஓர் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய போர்ஸ் மற்றும் ஜிகியூ சஞ்ஜிகைகள், பயனர்களின் அனுமதியின்றி தொலைபேசியில் சேமிக்கப்பட்ட நம் புகைப்படங்களை அச்செயலி பெற முடியாத நிலையில், திருத்தம் செய்வதற்காக பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அது அணுகலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பயனர்கள் புகைப்படத்தைப் பகிர வேண்டாம் என்று தேர்வுசெய்த பிறகும், திருத்தப்பட்ட புகைப்படங்களை கணினியில் சேமிக்க பேஸ்ஆப் அனுமதிக்கிறது.

#TamilSchoolmychoice

டெக் க்ரஞ்ச் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளித்த பேஸ்ஆப் பெரும்பாலான படங்கள் பதிவேற்றப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அதன் சேவையகங்களிலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டிருந்தது. பெரும்பாலும்எனும் சொல்எல்லா படங்களும்அல்ல என்ற சொற்றொடரை வலியுறுத்துகிறது என்றும் மூன்றாம் தரப்பினருக்கு பயனர்களின் தரவைப் பகிராது என்றும் டெக் க்ரஞ்ச் தெரிவித்தது.

இருப்பினும், பேஸ்ஆப்பின் சேவை விதிமுறைகளைப் பொறுத்தவரை, பயனரின் படம், பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்தி இந்நிறுவனம் பயனர்களின் அடையாளத்தை அடையாளம் காண போதுமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேஸ்ஆப் பயனர்களின் தரவை நீக்க முடியும் என்று டெக் க்ரஞ்ச் தெரிவித்துள்ளது, ஆனால் பயனர்கள் நீண்ட செயல்முறையைக் கடந்த பிறகே அதனை செய்ய இயலும் என்று கூறியுள்ளது.

இன்றுவரையிலும் 100 மில்லியன் மக்கள் கூகுள் பிளேயில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் இது 121 நாடுகளில் மிகவும் பிரபலமான பயன்பாடாகும்.