Home நாடு நஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

நஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

730
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சமூக ஊடகங்களில் தமது பதிவுகளை இடும் பொழுது கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி நினைவுப்படுத்தினார். அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

பொதுவில் பகிரப்படும் வழக்கு சம்பந்தமான எல்லா விதமான பதிவுகளுக்கும் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று நீதிபதி கூறினார்.

அரசாங்க தலைமை வழக்கறிஞரின் விண்ணப்பம் தொடர்பாக இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்க அடுத்த திங்கட்கிழமை அவர் தீர்ப்பளித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டது

#TamilSchoolmychoice

இன்று வியாழக்கிழமை, முகநூலில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்த பின்னர் அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் நிபந்தனையின்றி நஜிப் மன்னிப்பு கேட்குமாறு நீதிபதியிடம் முறையீடு செய்திருந்தார்.