Home நாடு “அரசியல் செயலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்!”- பிரதமர்

“அரசியல் செயலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்!”- பிரதமர்

738
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஓர் அமைச்சரின் அரசியல் செயலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஊழல் தடுப்பு அமைச்சரவை (ஜேகேகேஎம்ஆர்) கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் மகாதீர், கொள்கை அடிப்படையில் அரசியல் செயலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக இருக்க வேண்டும் என்று அக்கூட்டதில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார்.

அரசியல் செயலாளர் அமைச்சருக்கும் அவரது பகுதியில் உள்ள மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில், ஓர் அரசியல் செயலாளருக்கு அமைச்சர் தனது பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் உள்ள மக்களை தொடர்பு கொள்ள உதவுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த அரசாங்கத்தின் விசயத்தில் நாங்கள் கவனித்தது என்னவென்றால், அரசியல் செயலாளர்கள் ஒப்பந்தங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் செயலாளரின் கடமை அல்லஎன்று பிரதமர் கூறினார்.