Home நாடு “நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- டோமி தோமஸ்

“நஜிப் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்!”- டோமி தோமஸ்

617
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 3 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய கடன்பற்று அட்டை தொடர்பான செலவு விவகாரங்களை தனது முகநூல் பதிவில் பதிவிட்டதன் பேரில் நஜிப் ரசாக் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தலைமை அரசாங்க வழங்கறிஞர் டோமி தோமஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நஜிப்பின் இந்த நடவடிக்கையானது பொது மக்களின் விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றபடியால் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் முன்னாள் பிரதமரை எல்லோரையும் போலவே நடத்த வேண்டும் என்றும் தோமஸ் கேட்டுக் கொண்டார்.

நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்விண்டர்ஜித் சிங் நஜிப்பின் வழிக்காட்டுதல்களைப் பெற ஏதுவாக வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி பின்னர் ஹர்விண்டர்ஜித்தின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.