Home நாடு அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்!

அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்!

610
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இடையிலான கருத்து மோதல்கள் இப்போது அன்வாருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யும் அளவிற்கு வித்திட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கை காணொளிகளுடன் அஸ்மின் இணைக்கப்பட்ட போது, அவருக்கு பிரதமர் டாக்டர் மகாதீரின் ஆதரவு இருப்பதை தெளிவுப்படுத்தும் வகையில் இந்த புகார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாதீரின் விசுவாசமான ஆதரவாளரான கைருடின் அபு ஹாசன், அன்வாருடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிகளையும் விசாரிக்குமாறு நேற்று புதன்கிழமை காவல் துறையினரை வலியுறுத்தி டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

எட்டாவது பிரதமராக நாட்டை ஆளப் போகும் அன்வாருக்கு தொடர்ந்து அவதூறு செய்வதைத் தடுக்கும் அடிப்படையில்தான், அன்வாரை இணைத்து வெளியிடப்பட்ட அனைத்து காணொளிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவை உண்மையானதா அல்லது அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறா என்று தெரிய வேண்டும்.” என்று கைருடின் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

கடந்த மாதம், சாந்துபோங் பகுதியின் முன்னாள் பிகேஆர் கட்சியின் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் அக்காணொளியில் இருப்பது தாம்தான் என ஒப்புக் கொண்டதோடு, அவருடன் காணோளியில் இருப்பது பொருளாதார அமைச்சர் அஸ்மின் என குறிப்பிட்டிருந்தார்.

அக்காணொளிகள் அவதூறானது என்றும், தமது அரசியல் வாழ்க்கையை அழிக்க இவ்வாறு செய்யப்பட்டதாக அஸ்மின் விவரித்திருந்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் ஹசிக் மற்றும் அன்வாரின் அந்தரங்கச் செயலாளர் உட்பட பல நபர்களை கைது செய்துள்ளனர்.