Home நாடு ஜிஎஸ்டி: “நான் மன்னிப்புக் கேட்க முடியாது!”- குவான் எங்

ஜிஎஸ்டி: “நான் மன்னிப்புக் கேட்க முடியாது!”- குவான் எங்

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 19.4 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடனைத் திருப்பிச் செலுத்தும் சர்ச்சையில் அவை திருடப்பட்டது எனும் வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க இயலாது என்று குவான் எங் தெரிவித்தார்.  இது தேசிய பொது கணக்குக் குழு (பிஏசி) அறிக்கையில் ஒரு பிரச்சனையாகக் கொண்டு வரப்படவில்லை என்று அவர்குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஏற்கனவே கூறியதாக நான் நினைக்கிறேன். சூழல் என்ன என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு சூழலைப் பயன்படுத்தப்பட்டதாக நான் உணர்கிறேன்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருடப்பட்டதுஎனும் வார்த்தையை திரும்பப் பெறுமாறு லிம் குவான் எங்கை கோரியதுடன், சபாநாயகர் டத்தோஶ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பை நாடாளுமன்ற வழக்கு சொற்களிலிருந்து வெளியேற்றும்படி கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்தியதற்கான காரணத்தை அறிய இயலவில்லை என்றுக் கூறி அவரை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவுடம் சமர்பிக்க முடியாது என்று அரிப் கூறியிருந்தார். மேலும், தாம் இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தேசிய பொதுக் கணக்குக் குழு (பிஏசிஅறிக்கையின் உள்ளடக்கங்களையும் பரிசீலித்ததாக அரிப் கூறினார்.

இந்த கோரிக்கையானது எதிர்க்கட்சிகள் தன்னை குறிவைத்து நகர்த்தப்பட்ட  அரசியல் சூழ்ச்சி என்று லிம் கூறினார்.