Home One Line P2 “டிக்கிலோனா” – சந்தானத்தின் அடுத்த பட முன்னோட்டம்

“டிக்கிலோனா” – சந்தானத்தின் அடுத்த பட முன்னோட்டம்

890
0
SHARE
Ad

சென்னை : நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் “டிக்கிலோனா” என்ற படத்தின் முன்னோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் வெளியிடப்பட்டு பரவலான இரசிகர்களை ஈர்த்துள்ளது.

வெளியிடப்பட்ட ஒரே நாளில்17 இலட்சத்திற்கும் கூடுதலான பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் “”டிக்கிலோனா” ஈர்த்துள்ளது.

தொலைக்காட்சியில் நகைச்சுவைத் தொடர்கள் மூலம் அறிமுகமான சந்தானம், பின்னர் திரைப்படங்களில் நுழைந்து பல படங்களில் கதாநாயகனுக்கு துணைக் கதாபாத்திரங்களி்ல் நடித்துப் புகழ்பெற்றார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர் தனியாக கதாநாயகனாக நடித்த சில படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இப்போது அதையே தனது திரையுலகப் பயணமாகவும் கொண்டிருக்கிறார் சந்தானம்.

அதற்கேற்ப, நடிகர் ஆர்யாவுடன் இணைந்து சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு தனது உடலையும், கட்டுக் கோப்பாகவும் வலிமையுடனும் வைத்திருக்கிறார்.

“டிக்கிலோனா” என்ற வார்த்தை ஷங்கரின் இயக்கத்தில் வந்த “ஜென்டில்மேன்” திரைப்படத்திற்குப் பின்னர் தமிழர்களிடையே பிரபலமானது. வீட்டில் இருக்கும் மாமிகளை வைத்துக் கொண்டு நகைச்சுவை நடிகர் செந்தில் விளையாடும் ஒரு “தப்பாட்டத்தை” செந்தில் டிக்கிலோனா என்று அழைப்பார். கவுண்டமணி அதைக் கிண்டல் செய்வார்.

இப்போது அதே பெயரில் வெளியாகவிருக்கும் படத்தின் கதாநாயகனாக சந்தானம் நடித்திருக்கிறார். டைம் மெஷி்ன் எனப்படும் கால இயந்திரம் தொடர்பான படம் இது என்பது போன்ற காட்சிகள் முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: