Home One Line P1 அஸ்மின் அலி குழுவினர் பெர்சாத்துவில் இணைந்தனர்

அஸ்மின் அலி குழுவினர் பெர்சாத்துவில் இணைந்தனர்

612
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தானும் தனது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக இன்று சனிக்கிழமை அறிவித்தார்.

தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள அனைத்துலக வாணிப, கண்காட்சி மையத்தில் அரசாங்கச் சார்பற்ற இயக்கங்கள் இணைந்து, காங்கிரஸ் நெகாரா என்ற பெயரில் நடத்திய பிரம்மாண்ட கூட்டத்தில் அஸ்மின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் அஸ்மின் உரையாற்றினார். “பெர்லிஸ் முதற்கொண்டு சபா வரையிலான எனது ஆதரவாளர்கள் அனைவரும் பிரதமர் மொகிதின் யாசினின் தலைமைத்துவத்தை ஏற்று இன்று முதல் பெர்சாத்து கட்சியில் இணைகிறோம்” என பலத்த கரவொலிக்கிடையில் அவர் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மொகிதின் யாசினும் கலந்து கொண்டார்.

அஸ்மினின் அறிவிப்புக்குப் பின்னர் அவரது பெர்சாத்து கட்சி உறுப்பினர் அட்டையை மொகிதின் யாசின் அவருக்கு வழங்கினார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களும் பெர்சாத்துவில் இணையலாம்

அஸ்மின் அலியோடு பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிய மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களும் பெர்சாத்துவில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் மலாய் கட்சியாக துன் மகாதீரால் தொடங்கப்பட்ட பெர்சாத்து, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியிருக்கிறது.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா ஏற்கனவே பெர்சாத்து கட்சியில் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்.