Home நாடு “பிரதமர் பதவிக்கு அஸ்மின் எனது போட்டியே இல்லை!”- அன்வார்

“பிரதமர் பதவிக்கு அஸ்மின் எனது போட்டியே இல்லை!”- அன்வார்

836
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் பிரதமர் பதவியை ஏற்பதற்கு அஸ்மின் அலி ஒரு தடையாக இருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.

தமக்கு பிரதமர் மகாதீர் முகமட்டின் ஆதவரவும், பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் பிகேஆர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளதாக அவர் கூறினார்.

22 பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினர்கள் மற்றும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியைப் பிளவுபடுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அன்வாரை வலியுறுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரதமர் மகாதீரும் ஒரு சில அரசியல்வாதிகளும் பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை பிரதமராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று ஊகங்கள் எழும்பிய நிலையில் பிகேஆர் கட்சியில் குழப்பங்கள் எழத் தொடங்கியுள்ளன.