கொழும்பு, நவம்பர் 15- இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு தொடக்க விழா காலை 10:15 மணிக்கு தொடங்கியது. மாநாட்டிற்கு வருகை இங்கிலாந்து பிரதமர் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பிரதமர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே வரவேற்றார். இதனிடையே இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் இறுதி கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக கூறப்படும் தமிழர்கள் பகுதியில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கு அந்நாட்டு அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கை இறையாண்மை உள்ள நாடு என்று கூறிய அந்த அமைச்சர், இங்கிலாந்து பிரதமரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவத்தால் பிடிக்கப்பட்டு காணாமல் போன தங்கள் மகன்களை மீட்டு தர கோரி கொழும்புவில் அமைதி போராட்டம் நடைபெற்றது.