Home இந்தியா ” நாட்டை சீரழித்த ராகுல், தந்தை, தாத்தா , பாட்டி ”- மோடி கடும் விமர்சனம்

” நாட்டை சீரழித்த ராகுல், தந்தை, தாத்தா , பாட்டி ”- மோடி கடும் விமர்சனம்

511
0
SHARE
Ad

modi

ராய்கார், நவம்பர் 15- சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகையில்: காங்கிரஸ் தலைவர் மேடையில் எதுவும் சரியாக பேசுவதில்லை. அவர் இன்னும் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றார்.

நாட்டை விற்று கூறு போடுவர்களை காட்டிலும் டீ விற்பவன் பிரதமராவதில் தவறு இல்லை என்றும், கடந்த 60 ஆண்டுகளாக இந்த நாட்டை சுயநலத்திற்காக ராகுல், தந்தை , தாத்தா, பாட்டி என இந்த நாட்டை சீழித்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர் தமதுரையில் , “இளவரசர் (ராகுல்) சொல்கிறார் இந்த நாட்டின் வளர்ச்சியை விரும்புகிறாராம். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ராகுல் இவரது தந்தை, பாட்டி , தாத்தா என அனைவரும் இந்த நாட்டை தங்களின் சுயலாபங்களுக்காக சீரழித்து விட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரசை கலைக்க வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால் அவரது ஆசையும் , கனவும் இன்று வரை முடியாமல் போனது. நக்சல்கள் ஒழிப்பில் பா.ஜ., பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டு வந்தது. ஆனாங் காங்கிரஸ் அரசு இதனை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. நக்சல்களுக்கு பின்வாசலை திறந்து விட்டது.

நாட்டை விற்பவர்கள் விட டீக்காரன் மேல்; டீக்கடைக்காரர் பிரதமர் ஆக முடியுமா என்று சமாஜ்வாடி கேட்கிறது. இது ஏழை மக்களை வேதனைப்படுத்துவதற்கு சமம். நாட்டை விற்பவர்களை விட டீ விற்பவர்கள் பிரதமர் நாற்காலியில் உட்காரலாம். இவர்கள் ஏழையாக ஆக்கப்பட்டது தான் பாவம். இவர்கள் ஏழைகளாக இருந்தது குற்றமா ? ஏழை பெற்றோர்களை பெற்றது குற்றமா ? தங்களின் வயிற்றை நிரப்பிட டீ விற்றது குற்றமா ? இதனை மக்களிடம் விட்டு விடுவோம், அவர்கள் டீ அடிப்பவனை பிரதமர் ஆக்க வேண்டுமா , வேண்டாமா என்று முடிவு செய்யட்டும்.

மலிந்து போன ஊழல் : காங்கிரஸ் அரசுக்கு இப்போது அச்சம் வந்து விட்டது. காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெங்காயம் முதல் அனைத்து விலைகளும் ஏறி விட்டது. ஊழல் மலிந்து கிடக்கிறது. இந்த ஊழலை மக்களாகிய நீங்கள் ஒழிக்க விரும்பினால், காங்கிரஸ் அரசை அகற்றுங்கள்.

லதாமங்கேஷ்கர் எனக்கு ஆதரவு அளித்தால் இதனை காங்கிரசால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவருக்கு கொடுத்த பாரத ரத்னா விருதை பறிக்க வேண்டும் என்கிறார்கள். பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு எங்களை அதிகாரத்திற்கு வர செய்தால் , உங்கள் கனவுகளை நிறைவேற்றுவோம்.

காங்கிரஸ் அரசுக்கு தற்போது வேறு வேலையில் கவனம் இல்லை. தொலைக்காட்சியின் முன்னபாக அமர்ந்து கொண்டு மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார், மோடி என்ன பேசுகிறார் என்று என்னை கண்காணிக்கின்றனர். இதனால் இவர்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய பணியில் இருந்து தவறி வருகின்றனர்.

மத்தியில் உள்ள அரசாங்கம் , என்னையும், தங்க புதையல் எங்கு இருக்கிறது என்றும் தேடி அலைகிறது. கோட்டையில் தங்கம் எதுவும் கிடைக்காமல் அரசு ஏமாந்து போனது. சோனியா பா.ஜ., வை தாக்கி பேசி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இவர் மேடைக்கு வருவதற்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தன்னை தாயார் செய்ய வேண்டும் என்று  மோடி பேசினார்.