Home Featured இந்தியா இன்னொரு மோடியா! மெழுகுச் சிலையைப் பார்த்து அசந்த பிரதமர் மோடி!

இன்னொரு மோடியா! மெழுகுச் சிலையைப் பார்த்து அசந்த பிரதமர் மோடி!

1052
0
SHARE
Ad

modi statueபுதுடெல்லி – பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலை தயாராகிவிட்டது. சிலை அச்சு அசலாக மோடியை போன்றே உள்ளது. இதை பார்த்து மக்கள் டுவிட்டரில் விமர்சித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை ‘மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியக, பணியாளர்கள் செய்து முடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த சிலையை மோடிக்கு காண்பிக்கப்பட்டது. மெழுகுச் சிலையை பார்த்தால் மோடி, இன்னொரு மோடிதான் நிற்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அருமையாக உள்ளது. சிலையை பார்த்த மோடியே அசந்துவிட்டாராம்.

modi statue.jpg,சிலையை பார்த்த மோடி கூறுகையில், என்ன சொல்வது? பிரம்மா வழக்கமாக செய்வது போன்று இந்த கலைஞர்கள் என் சிலையை செய்துள்ளனர் என்றார். மோடி சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மோடியின் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

மோடியின் மெழுகுச் சிலை குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதில் ஒருவர் கூறியதாவது; தற்போது நாம் இரண்டு பேர் உள்ளோம். நான் உலகை சுற்றிப் பார்க்க செல்கையில், நீ என் இடத்தில் வீட்டில் இரு, யாருக்கும் அடையாளம் தெரியாது என ஒருவர் கிண்டலடித்துள்ளார்.