Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் அமைத்திருப்பது நகைச்சுவை கூட்டணி – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

விஜயகாந்த் அமைத்திருப்பது நகைச்சுவை கூட்டணி – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

707
0
SHARE
Ad

Actor Senthil speechசின்னாளபட்டி – ஆத்தூர் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் அமைச்சர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து  நடிகர் செந்தில் சின்னாளபட்டியில் வாக்கு சேகரித்தார்.  அப்போது நடிகர் செந்தில் பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகள், சொல்லாதவற்றையும் மக்களுக்காக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இந்த பணிகளே அ.தி.மு.க. வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த மக்கள் நல பணியால் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்திற்கு ஜெயலலிதா தான் முதலமைச்சராக வருவார்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். கருணாநிதி என்றால் குடும்ப அரசியலும், ஊழலும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

#TamilSchoolmychoice

ஸ்பெக்டரம் ஊழல் பணத்தில் கருணாநிதி குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலோடு திமுக கட்சியே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும்.  ஜெயலலிதா தயவால் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் தற்போது அமைத்துள்ள கூட்டணி நகைச்சுவை கூட்டணியாக மாறிவிட்டது என அவர்  பேசினார்.