Home இந்தியா பேஸ்புக்கில் டிஜிட்டல் இந்தியா ஆதரவு சர்ச்சைக்குள்ளானது: பேஸ்புக் விளக்கம்!

பேஸ்புக்கில் டிஜிட்டல் இந்தியா ஆதரவு சர்ச்சைக்குள்ளானது: பேஸ்புக் விளக்கம்!

960
0
SHARE
Ad

modi8நியூயார்க் – முகநூலைப் பயன்படுத்துவோர் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தருவதற்கும் தங்களது Internet.org திட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பது, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தனிப்பட்ட Internet.org திட்டத்தை ஆதரிப்பதாக ஆகாது என ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு முன் ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க் , ஃபேஸ்புக்கிலுள்ள தனது முகப்புப் படத்தை டிஜிட்டல் இந்தியா திட்ட பின்னணியுடன் கொண்டதாக மாற்றிக்கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஃபேஸ்புக் பயன்படுத்துவோரும் இதே போன்று தங்கள் படத்தை மாற்றிக்கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. இவ்வசதியைப் பயன்படுத்திப் பலரும் தங்களது படத்தை டிஜிட்டல் இந்தியா பின்னணியில் மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மாற்றிக் கொள்வது ஃபேஸ்புக்கின் Internet.org திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளதெனப் பலரும் குற்றம்சாட்டினர்.இதனால் இவ்விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் internet. Org தொடர்பில்லை என மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது