மாலத்தீவு அதிபர் ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு தனது மனைவியோடு கடல் மார்க்கமாகப் படகில் மாலத்தீவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, தலைநகர் மாலேயில் இருந்து சற்று தூரத்தில் அவரது படகு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது மனைவி இலேசான காயம் அடைந்தாத்; அவரது பணியாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இதில் சதி வேலை உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அனைத்துலக விசாரணையும் நடத்தப்படும் எனக் கொழும்புவில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹூசைன் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விசாரணையில் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.