Home உலகம் மாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்

மாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்

1116
0
SHARE
Ad

மாலே – இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் கடல் மார்க்கமான அண்டை நாடாகவும், சிறிய தீவு நாடாகவும் திகழும் மாலத் தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் அப்துல்லா யாமீனைத் தோற்கடித்து புதிய அதிபராக எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றிருக்கிறார்.

அழகிய தீவுகளைக் கொண்ட நாடு மாலத் தீவாகும். நடப்பு அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வேட்பாளராக இப்ராஹிம் முகமது சோலிஹ் என்பவரை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தின. இவர் 58.4 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 2013 முதல் அதிபராக இருந்து வரும் அப்துல்லா யாமீனைத் தோற்கடித்துள்ளார்.

சீனாவுக்கு சார்பாக செயல்பட்டு வருபவராக நடப்பு அதிபர் அப்துல்லா யாமீன் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக இவரது தோல்வி இந்த வட்டாரத்தில் தூதரக ரீதியாக சீனாவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.