மாலே – மாலத்தீவில் ஆளுங்கட்சி கவிழும் நிலை ஏற்பட்டு அரசியலில் குழப்ப நிலை நீடித்து வருவதால், அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருப்பதோடு, நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அண்மையில், அதிபர் யாமீனுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து போர்கொடி தூக்கினர்.
இதனால் பெரும்பான்மையை இழந்த யாமீன், அவர்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றமும் அதிபருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற மறுத்த அதிபர் யாமீன் நாடாளுமன்றத்தை முடக்கி இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.