Home நாடு தபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்

தபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்

786
0
SHARE
Ad

Post Lajuகோலாலம்பூர் – “வெளிநாடுகளில் இருந்து பதிவு செய்யப்படும் வாக்குகள் வெளிப்படையாகவும், நேர்மையான முறையிலும் கொண்டு சேர்க்கப்படும். காரணம் அதனைக் கொண்டு சேர்ப்பது போஸ் லாஜு தான். அவர்கள் மிகவும் நடுநிலையாக நடந்து கொள்வார்கள்” என தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறியிருக்கிறார்.

“போஸ் லாஜு, வாக்குகளை பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையாகவும் கொண்டு சேர்ப்பார்கள் என்பதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் அளிக்கிறது” என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிநாட்டு வாக்குகளை கொண்டு சேர்க்கும் பொறுப்பை போஸ் லாஜு மலேசியாவிடம் ஒப்படைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த குளோபல் பெர்சே அமைப்பைச் சேர்ந்த போராட்டவாதிகள், அதனை போஸ் லாஜுவுக்குப் பதிலாக விஸ்மா புத்ராவிடம் வழங்கும்படி சில நாட்களுக்கு முன் வலியுறுத்தினர்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளிக்கும் விதமாக முகமது ஹாசிம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.